இரண்டு வருட காலமாக தமிழ்நாடு, கர்நாடகா மாநில வனப்பகுதிகளின் எல்லையில் அமைந்துள்ள குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களைச் சேதப்படுத்திய விநாயகம் காட்டு யானையை கர்நாடக மாநில வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் சின்னதம்பி மற்றும் விநாயகம் ஆகிய இரு காட்டு யானைகள் கிராம பகுதிகளுக்குள் நுழைந்து குடியிருப்புகள் மற்றும் விளை நிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தி வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத் தொடர்ந்து கிராம மக்களை அச்சுறுத்தி வந்த சின்னதம்பி யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, டாப்ஸ்லிப் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு கும்கி யானையாக மாற்றப்பட்டது. அதேபோல் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மற்றொரு யானையான விநாயகம் காட்டு யானையை ரேடியோ காலர் பொருத்தப்பட்டு முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.