விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற புத்துவாயம்மன் திருக்கோயிலில் சித்திரை மாத திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அம்மனின் 60அடி உயர தேரை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இழுத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அருள்மிகு புத்துவாயம்மன் திருக்கோயில்.வேண்டுவதை நிறைவெற்றும் வல்லமை வாய்ந்த அம்மனாக இங்குள்ள பக்தர்களால் வணங்கப்பட்டு வரும் இத்திருக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் சித்திரை மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கொடியேற்றம் கடந்த மாதம் 26ம் தேதி வெகுவிமரிசையாக தொடங்கியது. திருவிழாவின் ஒவ்வொரு நாளிலும் அம்மன் பல விதமான அலங்காரங்களில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தினமும் அம்மனுக்கு நறுமண பொருட்களால் அபிஷேகங்கள் செய்ய்பட்டன.விழாவின் சிகர நிகழ்வான கொடியேற்றம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
60 அடி உயர அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள பக்தர்கள் பக்தர்கள்
பக்தி பரவசத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.முதலில் முதற்கடவுள் விநாயகபெருமானின் தேர் செல்ல பின்னே அம்மனின் தேர் வீதியுலா சென்றது.
அம்மனின் தேரானது கோலியனூர் கோயில் முதல் தோப்புத்தெரு, கிழக்குத் தெரு, வள்ளலார் தெரு உள்ளிட்ட பகுதிகள் வழியாக உலா வந்த அம்மனின் தேர் பக்தர்களின் பக்தி கடலில் மிதந்து கொண்டே மீண்டும் நிலையத்தை வந்தடைந்தது. சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டனர்.
—-வேந்தன்







