தடகளத்தில் தங்கம் வென்ற அபிநயாவுக்கு நெல்லையில் உற்சாக வரவேற்பு!

இளையோர் தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை அபிநயாவுக்கு திருநெல்வேலியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற தடகள போட்டியில் இந்தியா சார்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த அபிநயா கலந்து கொண்டார். இதில்…

இளையோர் தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை அபிநயாவுக்கு திருநெல்வேலியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற தடகள போட்டியில் இந்தியா சார்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த அபிநயா கலந்து கொண்டார். இதில் தொடர் ஓட்ட பந்தயத்தில் தங்கமும், 100 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கமும் வென்று தமிழக வீராங்கனை அபிநயா சாதனை படைத்தார்.

இந்நிலையில் போட்டி முடிந்து திருநெல்வேலிக்கு வந்த அபிநயாவுக்கு ரயில் நிலைய சந்திப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பயிற்சியாளர், சக வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் உறவினர்கள் என ஏராளமானோர் அபிநயாவுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதை தொடர்ந்து பேட்டி அளித்த அபிநயா டோக்கியோவில் நடைபெற்ற போட்டியில் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், எனது வெற்றிக்கு பயிற்சியாளர் மற்றும் பெற்றோரை காரணம் என தெரிவித்தார்.

—-கோ. சிவசங்கரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.