சாண்டி முத்தாரம்மன் கோயிலில் பால்குடம் ஊர்வலம்!

திருவள்ளூர் மாவட்டம், சாண்டி முத்தாரம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, பெண்கள் விரதம் இருந்து பால்குடம் ஊர்வலம் எடுத்து வழிபாடு நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் அமைந்துள்ள சாண்டி முத்தாரம்மன் கோயிலில்…

திருவள்ளூர் மாவட்டம், சாண்டி முத்தாரம்மன் கோயிலில் சித்ரா
பௌர்ணமியை முன்னிட்டு, பெண்கள் விரதம் இருந்து பால்குடம்
ஊர்வலம் எடுத்து வழிபாடு நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் அமைந்துள்ள சாண்டி
முத்தாரம்மன் கோயிலில் சித்திரை பௌர்ணமி தினத்தை முன்னிட்டு,
பக்தர்கள் விரதம் இருந்து காப்பு கட்டி பால் குடங்களை சுமந்து ஊர்வலமாக
வந்தனர். மேலும், ஓம் மகா மாய சக்தி கோயிலில் அம்மனுக்கு பால் அபிஷேகம்
செய்தனர். பின்னர், சிறப்பு ஆராதனைநடைபெற்றது. இதில்
ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து
கொண்டு சிறப்பித்தனர்.

—-கு. பாலமுருகன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.