திருப்பத்தூரில் கடந்த மாதத்தை விட 10மடங்கு மின்கட்டணம் அதிகமாக வந்தது என கூறி வெலக்கல்நத்தம் மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வெலக்கல்நத்தம் மின்வாரிய அலுவலகத்தை மின் இணைப்பு கட்டணம் கடந்த மாதத்தை விட இந்த மாதம் 10 மடங்கு அதிகமாக கட்டணம் வந்தாக கூறி பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
மேலும், வீடுகளுக்கு சென்று கணக்கீடு செய்யாமலேயே மின் கட்டணம் பெறுவதாக கூறி அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நந்திபெண்டா, குனிச்சியூர், புதுப்பேட்டை கிழக்கு போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து மின் இணைப்பு கட்டணம் செலுத்துவதற்காக 12000 மின் இணைப்பு கட்டணம் உள்ளது. ஆனால் இம்மாதத்தில் ஒரு சில மின் இணைப்பிக்கு நூறு ரூபாய் கட்ட வேண்டிய இணைப்பிற்கு 2500 ரூபாய் மின் கட்டணம் வந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதில் பரபரப்பு நிலவியது.
-சௌம்யா.மோ






