விக்ராந்தின் #TheKillerMan… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

‘கற்க கசடற’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விக்ராந்த். இதனைத் தொடர்ந்து இவர் கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, பாண்டியநாட, பக்ரீத் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…

Vikrant's #TheKillerMan... First Look Poster Released!

‘கற்க கசடற’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விக்ராந்த். இதனைத் தொடர்ந்து இவர் கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, பாண்டியநாட, பக்ரீத் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான ‘லால் சலாம்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

மேலும் இத்திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்னேஷ், லிவிங்ஸ்டன், செந்தில், ஜீவிதா, கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமையா, நிரோஷா, விவேக் பிரசன்னா, தங்கதுரை ஆதித்யா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் இடம்பெற்றிருந்தார். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். 

இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த சூழலில், நடிகர் விக்ராந்த் தற்போது ‘வில் அம்பு’ திரைப்பட இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் இயக்கத்தில் நடிக்கிறார். இத்திரைப்படத்தில் பவித்ரா மாரிமுத்து, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தை பிக் பேங் சினிமாஸ் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு ‘தி கில்லர் மேன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.