சிறை அலுவலர் பணி – அக்டோபர் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

சிறை அலுவலர் பணிக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் அக்டோபர் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு சிறைப் பணிகளில் அடங்கிய சிறைகள் மற்றும் சீர்திருத்தத் துறையின் சிறை…

சிறை அலுவலர் பணிக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் அக்டோபர் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு சிறைப் பணிகளில் அடங்கிய சிறைகள் மற்றும் சீர்திருத்தத் துறையின் சிறை அலுவலர் பதவிக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்விற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து அக்டோபர் 13 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதில், ஆண்களுக்கு 6 சிறை அலுவலர் காலி பணியிடங்களும், பெண்களுக்கு 2 காலி பணியிடங்களும் உள்ளன. மாதம்தோறும் ரூ. 38,900 முதல் ரூ. 1,35,100 வரை ஊதியம் வழங்கப்படும். 01.07.2022 தேதியின்படி எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு வயவரம்பு இல்லை. ஏனையோர் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குற்றவியல் மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகம் மற்றும் சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள்  http://www.tnpsc.gov.in, http://www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 22.12.2022 முற்பகல் 9.30 முதல் பிற்பகல் 12.30 வரை தாள்-1க்கான தேர்வும், பிற்பகல் 2.30 முதல் 5.30 வரை தாள்-2க்கான எழுத்துத் தேர்வும் நடைபெறவுள்ளது. அக்டோபர் 13ஆம் தேதி ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும். மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/Jailor%20Tamil.pdf என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.