முக்கியச் செய்திகள் தமிழகம்

5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று தமிழ்நாட்டில் தீவிரமடைவதன் எதிரொலியாக, சில மாவட்டங்களில் கனமுதல் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும், என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில், மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம், என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

Halley karthi

ராணுவத்தை எதிர்த்த மியான்மர் அழகி!

அர்ச்சகர்கள் வெளியேற்றப்படுகிறார்களா? அமைச்சர் சேகர்பாபு பதில்  

Ezhilarasan