குடும்ப தகராறில் தந்தையை வீட்டு வாசலில் இருந்து மகன் தள்ளிவிடும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் உள்ள சிங்கிரிபோவிதொட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவர் கர்நாடக மாநில போக்குவரத்து துறையில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் இவரது தந்தைக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் 65 வயதான அவரது தந்தை திம்மய்யாவை வீட்டு வாசலில் இருந்து குமார் தள்ளிவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் குமாரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.








