நடிகர் விஜயின் வாரிசு திரைப்படம் பிப்ரவரி 22ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘வாரிசு’. இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, இப்படத்தின் தெலுங்கு பதிப்பான ‘வாரசுடு’ கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படம் 11 நாட்களில் உலக அளவில் ரூ. 250 கோடியை வசூலித்துள்ளதாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் , ஓடிடி தளத்தில் ,வாரிசு திரைப்படம், பிப்ரவரி 22ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-ம.பவித்ரா








