தென்னாப்ரிக்கா சென்ற விஜய் 68 படக்குழு!

வெங்கட் பிரபு இயக்கி விஜய் நடிக்கும் ‘தளபதி 68’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தென்னாப்பிரிக்காவில் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்.19-ம் தேதி வெளியாகிறது.…

வெங்கட் பிரபு இயக்கி விஜய் நடிக்கும் ‘தளபதி 68’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தென்னாப்பிரிக்காவில் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்.19-ம் தேதி வெளியாகிறது. இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.

இதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். நேற்று ‘தளபதி 68’ படத்திற்கான பூஜை நடைபெற்று முடிந்தது. ‘லியோ’ படத்தின் ரிலீசுக்கு பின்னர் தளபதி 68 படத்திற்கான அப்டேட்கள் கொடுக்கப்படும் என்று இயக்குநர் வெங்கட் பிரபுவும் தெரிவித்துள்ளார்.‘தளபதி 68’ படத்தில் ஜெயராம், மோகன், சினேகா, லைலா உள்ளிட்டோர் இணைந்ததுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க உள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. பாடல் காட்சி ஒன்றை எடுத்துள்ளனர்.

இந்நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு தென்னாபிரிக்கா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, பிரியங்கா மோகன், மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.