முக்கியச் செய்திகள்

விஜயகாந்த் நலமாக இருக்கிறார்: பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமாக இருக்கிறார் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவின் 56 ஆண்டுகால அரசியல் பயணம் குறித்து குறும்படம் வெளியிடும் நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் வழங்க மதிமுக கட்சி தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அப்போது துரை வைகோ பேசுகையில், “எம் ஜி ஆர் போன்று வள்ளல் மனம் படைத்தவர் விஜயகாந்த். அவர் தொடர்ந்து அரசியலில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். ஆவணப்படம் வெளியிடப் போகிறோம். அதற்கு அழைப்பு விடுப்பதற்காக வந்தேன். அதிமுக பாஜக தவிர்த்து அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது. 75 நிமிடங்கள் கொண்ட ஆவணப்படம் வெளியிடப்பட உள்ளது. எந்த இயக்கத்தையோ, எந்த நபரையோ தாக்குவது இல்லை. வைகோவின் சாதனைகள் அவரின் அரசியல் பயணம் பற்றியது. முதலமைச்சர் தான் துவங்கி வைக்க உள்ளார் என்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதைத்தொடர்ந்து, பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், இரத்த உறவுகள் நீங்கள். இரத்த தானத்திற்கு வந்த பலரின் இரத்த வகுப்பு கேப்டன் விஜயகாந்த் இரத்தவகுப்பான ஓ பாஸிடிவ் தான். மற்றவர்கள் b பாஸிடிவ் என்னுடைய இரத்த வகை. வதந்திகளை பரப்ப வேண்டாம். விஜயகாந்த் நன்றாக உள்ளார். அவர் கட்சி அலுவலகத்திற்கு வந்து தொண்டர்களைச் சந்திக்க ஆசைப்பட்டார். அதற்காக தான் அழைத்து வந்தோம். நாளையும் விஜயகாந்த் தலைமைக் கழகத்திற்கு வருகிறார். நமது முரசு நாளை தமிழக அரசாக மாறும். நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம். விஜயகாந்த் நலமாக இருக்கிறார். உடல் நிலை பிரச்சனையால் சோர்வு தானே தவிர அவர் எங்களுக்கு அறிவுரை அளித்து வருகிறார் என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆசியாவின் தூய்மையான விமான நிலையம் எது? ஏசிஐ வெளியிட்ட தகவல்

Jayasheeba

’கனவுகளை கட்டிக் கொண்டிருக்கிறேன்..’ விஜய் ஹீரோயின் ஹேப்பி போஸ்ட்

Halley Karthik

சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரம்; தீவிரமாகும் விசாரணை

Web Editor