முக்கியச் செய்திகள் குற்றம்

கனியாமூர் பள்ளி தாளாளர், ஆசிரியர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள்? உயர்நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் ஆகியோர் எதற்காகக் கைது செய்யப்பட்டார்கள்? என்பதற்கான காரணத்தை நாளை மறுதினம் தெரிவிக்காவிட்டால், விசாரணை அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

மாணவி மரணம் தொடர்பான வழக்கில் கைதான பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவியின் உடல் இரண்டு முறை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தங்கள் மீது என்ன வழக்கு என்றே தெரியவில்லை. மாணவி மரணத்திற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அண்மைச் செய்தி: ‘8 மணிநேர தூக்கம் இன்றியமையாதது ஏன் தெரியுமா?’

மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டு இருக்கலாம் எனச் சந்தேகம் உள்ளது என மாணவியின் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் ஆகியோர் எதற்காகக் கைது செய்யப்பட்டார்கள்? என்பதற்கான காரணத்தை நாளை மறுதினம் தெரிவிக்காவிட்டால், விசாரணை அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

போதை ஆசாமிகளிடமிருந்து பாதுகாப்பு கேட்டு திருநங்கைகள் கோரிக்கை!

Jeba Arul Robinson

ஜோதி வடிவில் காட்சி அளித்த ஐயப்பன்; சரண கோஷம் எழுப்பி பக்தர்கள் பரவசம்

Yuthi

வலிப்பு வந்தவருக்கு உதவி செய்த அண்ணாமலை!

G SaravanaKumar