விஜயதசமி – பூக்கள் விலை அதிகரிப்பு

விஜயதசமி பண்டிகையையொட்டி, பூக்கள் விலை அதிகரித்துள்ளதாக மதுரை மாட்டுத்தாவணி பூச்சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நவராத்திரி பண்டிகையின் முக்கிய நிகழ்வான ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகைகள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பூக்கள், பழங்கள்…

விஜயதசமி பண்டிகையையொட்டி, பூக்கள் விலை அதிகரித்துள்ளதாக மதுரை மாட்டுத்தாவணி பூச்சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நவராத்திரி பண்டிகையின் முக்கிய நிகழ்வான ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகைகள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பூக்கள், பழங்கள் விற்பனை, பூஜை பொருட்களின் விற்பனை களைகட்டியுள்ளது.  இதையொட்டி, மதுரையில் அவல், பொரி, கடலை, சர்க்கரை, பழங்கள், வாழை மரம், தோரணங்கள் மற்றும் இனிப்புகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

வீடுகள், சிறு கடைகள், பெரிய விற்பனை நிறுவனங்கள், கைத்தொழில் செய்யும் இடங்கள், பணிமனைகள், பெரிய தொழிற்சாலைகள், ஆலைகள், தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், விஜயதசமியை முன்னிட்டு பூக்கள் விலை அதிகரித்துள்ளது.  மல்லிகைப் பூ கிலோ ரூ. 500 முதல் ரூ. 600 வரையும், பிச்சிப்பூ கிலோ 400 ரூபாய், முல்லைப்பூ கிலோ 400 ரூபாய், சம்மங்கி கிலோ 180 ரூபாய், பட்டன் ரோஸ் கிலோ 180 ரூபாய், செண்டு மல்லிப்பூ கிலோ 70 ரூபாய், அரளிப்பூ கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. விஜயதசமி காரணமாக பூக்கள் விலை உயர்ந்துள்ளதாக மதுரை மாட்டுத்தாவணி பூச்சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.