முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

தேமுதிகவுக்கு ஏன் வாக்களிக்க மறுக்கிறீர்கள்: விஜய பிரபாகரன் கேள்வி!

தேமுதிகவுக்கு ஏன் வாக்களிக்க மறுக்கிறீர்கள் என விஜய பிரபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது தேமுதிக. தேமுதிக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன் ஆகியோர் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே கடலூர் சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் ஞானபண்டிதனை ஆதரித்து விஜய பிரபாகரனை இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மக்கள் பிரச்சினையைப் பற்றி யாரும் பேசவில்லை என்றும், மாறி மாறி ஊழல் செய்ததை பற்றியே பேசிவருகின்றனர் என்றும் குற்றம்சாட்டினார்.

1,000 மற்றும் 1,500 ரூபாய்க்காக மட்டுமே மக்கள் சிந்திக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்த அவர், வீட்டுக்கு வீடு ரேஷன் பொருட்கள் வரும் என 15வருடத்திற்கு முன்னரே விஜயகாந்த் வாக்குறுதி அளித்துவிட்டார். , பழைய மாதிரி கேப்டன் இருந்தால் அப்படி இருந்திருக்கும் இப்படி இருந்திருக்கும் எனக் கூறும் மக்களே, தேமுதிகவுக்கு ஏன் வாக்களிக்க மறுக்கிறீர்கள், தேமுதிகவும் விஜயகாந்தும் என்ன தவறு செய்தோம் எனவும் கேள்வி எழுப்பிய அவர், இவ்வளவு நாள் கேப்டன் செய்தது எல்லாம் வீணா எனவும் வேதனையோடு கேட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

RCBvsSRH: ஆறுதல் வெற்றி பெறுமா ஹைதராபாத்?

Saravana Kumar

12 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி: அனுமதி வழங்கப்படுவதாக தகவல்

Vandhana

பொதுமக்களின் குறைகளை தீர்க்க தனி இலாகா உருவாக்கப்படும்! – மு.க.ஸ்டாலின்

Nandhakumar