விரைவில் விஜய் – மாணவர்கள் சந்திப்பு… தீவிர பணியில் தவெக நிர்வாகிகள்!

தொகுதிவாரியாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கியதாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில்…

தொகுதிவாரியாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கியதாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து கௌரவிக்கும் விழா வரும் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியது போல், இந்த ஆண்டும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை தேர்வு செய்யும் பணியானது நேற்று (மே 14) தொடங்கி உள்ளது. தொகுதி வாரியாக தவெக நிர்வாகிகள் மாணவர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்த நபருக்கு சிறப்பு பரிசும்,  ஒவ்வொரு தொகுதியில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கப்பட உள்ளது.  மாணவர்களை கௌரவிக்கும் இந்த விழா பெரும்பாலும் சென்னையில் ஜூன் 20 முதல் 26 தேதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டை விட மாணவர்களிடையே நடிகர் விஜய் அதிக நேரம் கலந்துரையாட உள்ளார் எனவும் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.