நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ‘லியோ’ திரைப்படத்தில் அவர் நடித்த சிறு வீடியோ கிளிப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில், இப்படத்தின் முதல் சிங்கள் பாடலான ‘நான் ரெடி தான் வரவா’ பாடல் சென்ற மாதம், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாடலான ‘நா ரெடி’ பாட்ல் வெளியாகி வைரலாகியுள்ளது.
இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் அண்மையில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார். இதனால் படத்தின் மற்ற பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கி அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
https://twitter.com/Dir_Lokesh/status/1685236223734956032
மிஷ்கின், சஞ்சய் தத் இருவரும் வில்லன்களாக நடிப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. நடிகர் விஜய்க்கு தந்தையாக நடிகர் சஞ்சய் தத் நடித்திருப்பதாக இணையதளத்தில் பகிரப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று சஞ்சய் தத் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு பரிசளிக்கும் பாணியில் லியோ படத்தில் நடிகர் சஞ்சய் தத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.







