மொஹரம் பண்டிகை: துக்கம் அனுசரித்து பேரணி நடத்திய ஷியா முஸ்லிம்கள்!

மொஹரம் பண்டிகையையொட்டி சென்னையில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் கத்தியால் தங்களை தாங்களே அடித்துக கொண்டு துக்கம் அனுசரித்தனர். இஸ்லாமியர்களின் புனித தினங்களில் ஒன்றாக மொஹரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது…

மொஹரம் பண்டிகையையொட்டி சென்னையில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் கத்தியால் தங்களை தாங்களே அடித்துக கொண்டு துக்கம் அனுசரித்தனர்.

இஸ்லாமியர்களின் புனித தினங்களில் ஒன்றாக மொஹரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக இந்த கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்தின் பத்தாவது நாளில் ஷியா பிரிவு முஸ்லீம்கள் துக்க நாளாக கடைபிடித்து வருகின்றனர்.

இதனால் மொஹரம் பண்டிகையின் போது தங்களின் துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது உடம்பை கத்தி, பிளேடு மற்றும் கூர்மையான ஆயுதங்களால் தலை, மார்பு, முதுகுகளில் தாக்கிக்கொண்டு ரத்தம் சொட்ட, சொட்ட ஊர்வலமாக சென்று தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் மொஹரம் பண்டிகையை மாரடி விழா என்றும் குறிப்பிடுகிறார்கள்.

அந்த வகையில், சென்னை ராயப்பேட்டையில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் துக்கப் பேரணி நடத்தினர். அப்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கருப்பு உடை அணிந்து தாங்களை தாங்களே அடித்துக் கொண்டு வருத்தத்தை தெரிவித்தவாறு ராயப்பேட்டையில் இருந்து ஊர்வலமாக நடை பயணம் மேற்கொண்டு மவுண்ட்
ரோடு பகுதியில் உள்ள மசூதிக்கு சென்றனர்.

இவர்களில் ஒரு சிலர் தங்கள் வீடுகளில் அலம் என்று சொல்லப்படும் பூவால் அலங்கரிக்கப்பட்ட பொருளை எடுத்துக் கொண்டு குதிரை மேல் ஏறியும்
ஊர்வலமாக சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.