நடிகர் சிம்பு ‘தக் லைப்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘அரசன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது.
இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க உள்ள இப்படம் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகுகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதி இணைந்திருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இது தொடர்பான போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. விஜய் சேதுபதி இதற்கு முன்பு வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 1, 2 படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






