தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் அக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. தொடர்ந்து பெரும்பான்மைக்கான எண்ணிக்கையை திரட்டும் பணியில் தவெக ஈடுபட்டது. இது தொடர்பாக தவெக தரப்பில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கோரப்பட்டது.
இதனை தொடர்ந்து காங்கிரஸ் (5), சிபிஐ (2), சிபிஎம் (2) ஆகிய கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ளது. இதனால் தவெக ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் மற்றொரு திமுக கூட்டணி கட்சியான ஐ.யு.எம்.எல் கட்சியும் தவெகவிற்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது. இது தொடர்பான கடிதத்தை அக்கட்சி மின்னஞ்சல் மூலம் தவெகவிற்கு அனுப்பியுள்ளது. 2 இடங்களில் வெற்றி பெற்ற ஐ.யு.எம்.எல் கட்சியின் ஆதரவு மூலம் தவெக 118 என்கிற மெஜாரிட்டிக்கான எண்ணிக்கையை எட்டியுள்ளது.







