முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா தமிழகம் சினிமா

இன்ஸ்டாவிலும் விஜய் – அதிவேக 10 லட்சம் Followers-ஐ பெற்று உலக சாதனை!!

இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கிய 99 நிமிடங்களில் 10 லட்சம் ஃபாலோவர்ஸை கடந்த நடிகர் விஜய், உலகளவில் மிக விரைவாக 10 லட்சம் ஃபாலோவர்ஸை பெற்றவர்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை குவித்து வைத்திருப்பவர். வாரிசு படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும் ’லியோ’ திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமூக வலைதளங்களில் டிவிட்டரை மட்டும் பயன்படுத்தி வந்த நடிகர் விஜய், நேற்று இன்ஸ்டாகிராமிலும் இணைந்தார். தமது முதல் பதிவில் ‘ஹலோ நண்பாஸ் மற்றும் நண்பிஸ்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கிய உடனேயே, அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குவியத் தொடங்கியது. விஜய் இன்ஸ்டாவில் இணைந்த 20 நிமிடங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தையும், 99வது நிமிடத்தில் அது 10 லட்சத்தையும் கடந்தது. இதன்மூலம், மிக விரைவாக 10 லட்சம் followers-ஐ பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையை நடிகர் விஜய் படைத்துள்ளார்.

BTS இசைக்குழுவை சேர்ந்த “வி” என்ற பாடகர் 43 நிமிடங்களிலும், ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி 59 நிமிடங்களிலும் 10 லட்சம் ஃபாலோவர்ஸை பெற்றனர். 99வது நிமிடத்தில் 10 லட்சம் ஃபாலோவர்ஸை பெற்றுள்ள விஜய், உலகளவில் மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram