உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ் தற்போது குணமடைந்து வாடிகன் தேவாலயத்திற்குத் திரும்பியுள்ளார்.
போப் பிரான்சிஸிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் மூச்சுத் திணறல் ஏற்பட்டது .இதையடுத்து ரோம் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். போப் குணமடைய வேண்டி பிரதமர் மோடி உட்பட பலர் பிரார்த்தனை செய்வதாகத் தெரிவித்தனர்.
அத்துடன் தீவிர சிகிச்சைக்கு பின் போப் பிரான்சிஸ் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக வாடிகன் செய்தி தொடர்பாளர் மெட்டோ புருனி தெரிவித்தார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ் தற்போது குணமடைந்து வாடிகன் தேவாலயத்திற்குத் திரும்பியுள்ளார்.
அவரது உடல்நிலை சீராக உள்ளதாக ரோம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, போப் பிரான்சிஸை காண நூற்றுக்கணக்கான மக்கள் தேவாலயத்தின் முன்பு குவிந்தனர்.







