“விஜயகாந்த் நிஜத்திலும் கேப்டன் தான்” – பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிஜத்திலும் கேப்டன் தான் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.  திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்த பின் பேசிய பிரதமர் நரேந்திர…

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிஜத்திலும் கேப்டன் தான் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார். 

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்த பின் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதாகக் கூறினார்.

அப்போது பிரதமர் மோடி கூறியதாவது,

“விஜயகாந்தை நாம் இழந்து உள்ளோம். விஜயகாந்த் நிஜத்திலும் கேப்டன் தான். சிறந்த தேசியவாதியாக திகழ்ந்தவர். சினிமாவிலும் அரசியலிலும் கேப்டனாக இருந்தவர் விஜயகாந்த். மேலும், திரைப்படங்களில் அவரது செயல்பாடுகள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர். அரசியல்வாதியாக தேசிய நலனை மட்டுமே முன்னிறுத்தினார். விஜயகாந்த் குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள் : திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி | நேரில் வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி,  மழை, வெள்ளம் காரணமாக, தமிழ்நாடு மக்கள் கடந்த ஆண்டு கடுமையான துயரத்தை அனுபவித்தீர்கள். அதிக வலியை அனுபவித்தீர்கள். இந்தத் துயரமான நேரத்தில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்து வருகிறது என்றார். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.