குழந்தையின் க்யூட்டான ஆசையை நிறைவேற்றிய விஜய்!

தன்னை பார்க்க வேண்டும் என்று குழந்தை ஒருவர் கேட்டுக்கொண்டதை அடுத்து, நடிகர் விஜய் அந்த குழந்தையை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு பேசி மகிழ்ந்தார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்…

தன்னை பார்க்க வேண்டும் என்று குழந்தை ஒருவர் கேட்டுக்கொண்டதை அடுத்து, நடிகர் விஜய் அந்த குழந்தையை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு பேசி மகிழ்ந்தார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை குவித்து வைத்திருப்பவர். வாரிசு படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும் ’லியோ’ திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

ரசிகர்களால் ’தளபதி’ என்று கொண்டாடப்படும் இவர், சீரிய நடிப்பால் பலரது உள்ளங்களைக் கவர்ந்தவர். படப்பிடிப்பு தளங்களிலும், மற்ற சில இடங்களிலும் அவரைக் காண ரசிகர்கள் குவிவது வழக்கம். பெரியவர்கள் மட்டுமல்லாமல், சிறு குழந்தைகளின் மனதிலும் விஜய்-க்கு என்று தனி இடம் இருக்கிறது.

இதையும் படியுங்கள் : BLACKPINK ஜிசூ-வின் முதல் சோலோ ஆல்பம் வெளியானது – ரசிகர்களின் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!!!

அந்த வகையில், பல்லாவரத்தைச் சேர்ந்த குழந்தை ஒருவர், ”விஜய் அங்கிள் என்னை பார்க்க வாங்க” என்று வீடியோ பதிவு மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

https://twitter.com/BussyAnand/status/1641734793917530115?t=BE7H-YNFzhUI_YWPWP1MCw&s=08

இந்த வீடியோ பற்றி அறிந்த விஜய், அந்த குழந்தை மற்றும் அவரது குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசி மகிழ்ந்தார். விஜய்யுடன் பேசிய அந்த குழந்தையும் அளவுகடந்த மகிழ்ச்சி அடைந்தது.சிறு குழந்தையின் க்யூட்டான ஆசையை நிறைவேற்றிய விஜய்க்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.