கேரள முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிரான நிதி முறைகேடு வழக்கு- மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்களுக்கு எதிரான அரசு நிதி முறைகேடு வழக்கு, மூன்று நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி கட்சிகளின்…

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்களுக்கு எதிரான அரசு நிதி முறைகேடு வழக்கு, மூன்று நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி
கட்சிகளின் ஆட்சி நடந்து வருகிறது. இவரது ஆட்சியில் முதலமைச்சர் பேரிடர்
நிவாரண நிதியில் முறைகேடு நடந்ததாக பினராயி விஜயன் மற்றும் 18 அமைச்சர்கள்
மீது புகார் எழுந்தது.

குறிப்பாக மறைந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் உழவூர் விஜயனின் குடும்பத்திற்கு முதல்வர் பேரிடர் நிவாரணநிதியில் இருந்து ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபோல கொடியேறி பாலகிருஷ்ணனின் பாதுகாப்பு அலுவலர் மறைந்த பிரவீனின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்கிய விவகாரமும் சர்ச்சையானது.

இது தொடர்பாக முதல்வர் பேரிடர் நிவாரண நிதி முறைகேடாக வழங்கப்பட்டதாக லோக் ஆயுக்தா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந் தேதி இந்த வழக்கின் விசாரணை தொடங்கியது. வழக்கின் விசாரணை முடிவடைந்த பின்னர் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.

ஓராண்டு ஆன பின்னரும் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகாமல் இருந்தது. சிவில் நடைமுறை சட்டப்படி விசாரணை முடிந்த 30 நாட்களுக்குள் இதுபோன்ற வழக்குகளில் தீர்ப்பு கூறப்பட வேண்டும். ஆனால் கேரளாவில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை முடிந்து ஓராண்டு ஆன நிலையில் தீர்ப்பு வெளியாகாமல் இருந்தது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஆர்.எஸ்.சசிகுமார் கேரளா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை
தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பில் இரண்டு அமர்வு கொண்ட நீதிபதிகள்
இரு வேறு தீர்ப்புகள் கொடுத்துள்ளதால் இந்த வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட
அமர்வுக்கு மாற்றப்பட்டது.

நீதிபதி சிரியாக் ஜோசப், நீதிபதி ஹரூன் அல் ரஷீத் இரண்டு பேர் கொண்ட பெஞ்சில் கருத்து வேறுபாடு இருப்பதாகவும், எனவே அது 3 பேர் கொண்ட அமர்வுக்கு விடப்படுவதாகவும் கூறினார். தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி சிரியாக் ஜோசப் மற்றும் நீதிபதி ஹரூன் அல் ரஷீத் ஆகியோர் இந்த தீர்ப்பை வழங்கினர். இதனால் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி அரசுக்கு தற்பொழுது நெருக்கடியில் தப்பி தற்காலிகமாக நிம்மதியடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.