நடிகர் விஜயின் பிறந்தநாளையொட்டி, வாரிசு திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் விஜய் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ இப்படத்தை தாயரிக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், முக்கியக் கதாப்பாத்திரங்களில் சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இதில், விஜய் ஒரு பாடல் பாடவுள்ளதாகவும தகவல் வெளியாகியுள்ளது. குடும்பப் படமாக உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று வெளியாகி ரசிகர்களிடையே பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றது. அடுத்த ஆண்டு பொங்கல் அன்று இத்திரைப்படம் ரிலீஸாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
https://twitter.com/SVC_official/status/1539491905745977344?t=GPQ7gehkg01yCihpRFZGQQ&s=08
இந்நிலையில், விஜயின் பிறந்த நாளையொட்டி, வாரிசு படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர். குழந்தைகளுக்கு நடுவே விஜய் கெத்தாக சிரித்துக் கொண்டே படுத்திருக்கும் வகையிலான இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
-ம.பவித்ரா







