முதல் மாநாட்டில் 45 நிமிடங்கள் மட்டுமே உரையாற்றிய விஜய்… காரணம் என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு வந்த விஜய், சுதந்திரப்…

vijay speech, TVK Vijay, TVK Maanadu, Thalapathy Vijay

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு வந்த விஜய், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ரிமோட் கன்ட்ரோல் மூலம் மேடையில் இருந்தே 100 அடிக் கம்பத்தில் கொடியேற்றினார். தொடர்ந்து தொண்டர்களிடையே பேசிய அவர் அரசியல், தங்களின் அரசியல் நிலைப்பாடு, கட்சியின் கொள்கை, கொள்கைத் தலைவர்கள் குறித்து பேசினார். பெண்களை கொள்கைத் தலைவர்களாக கொண்டு இயங்கும் ஒரே கட்சி தவெகதான் எனவும் தெரிவித்தார்.

பேச்சுக்கு நடுவே பல கட்சிகளையும் மறைமுகமாக சாடினார். பிளவுவாத அரசியல், திராவிட மாடல், நீட் எதிர்ப்பு, ஜாதி வாரி கணக்கெடுப்பு என முதல் மாநாட்டிலேயே அரசியல் பிரச்னைகள் குறித்து பேசினார். ஆனால் அரசியல்வாதிகள் பற்றி பேசி நேரத்தை வீண்டிக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்தார். தனது முதல் மாநாட்டில் கிட்டதட்ட 45 நிமிடங்கள் பேசினார். தற்போதைய தலைமுறையினரை கருத்திற்கொண்டுதான் பேச்சும் மணிக்கணக்கில் இருக்கக் கூடாது என்று முடிவெடுத்ததாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.