‘காதலர் தின’ வாழ்த்துக்களை தெரிவித்த விக்னேஷ் சிவன்!

இயக்குநர் விக்னேஷ் சிவன்,  நயன்தாராவுடன் இருக்கும்  புகைப்படங்களை பகிர்ந்து, காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.   உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தன்னுடைய மனதுக்கு விருப்பமானவர்களிடம் காதலை வெளிப்படுத்தி,  அன்பைப் பகிரும் நாளாக…

இயக்குநர் விக்னேஷ் சிவன்,  நயன்தாராவுடன் இருக்கும்  புகைப்படங்களை பகிர்ந்து, காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  

உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தன்னுடைய மனதுக்கு விருப்பமானவர்களிடம் காதலை வெளிப்படுத்தி,  அன்பைப் பகிரும் நாளாக ‘காதலர் தினம்’ அனுசரிக்கப்படுகிறது.  பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை,  ஒரு வாரம் காதலர் தின வாரமாகவும் கடைபிடிக்கப்படுகிறது.

ரோஸ் டே,  ப்ரொப்போஸ் டே,  சாக்லேட் டே,  டெட்டி டே,  ப்ராமிஸ் டே,  ஹக் டே,  கிஸ் டே, வாலென்டைன்ஸ் டே என 7 நாட்களுக்கு 7 விதவிதமான தினங்களை காதலர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். காதலன்/காதலியிடம் ரோஜா பூ, மோதிரம், க்ரீட்டிங் கார்டுகளை கொடுத்து தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் வழக்கம் காலம் காலமாக தொடர்ந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.  இவரும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் இருக்கும்  புகைப்படங்களை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்து, காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.