தொடர்ச்சியான வேலைகளுக்குப் பிறகு, இங்கே நாம் நமக்காகச் சிறிது நேரம் எடுத்துக்கொள்கிறோம். விக்னேஷ் – நயன்தாரா ஜோடியின் வைரல் பதிவு.
தமிழ் திரையுலகில் இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என வலம் வரும் விக்னேஷ் சிவனும் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாராவும் கடந்த 6 வருடங்களாகக் காதலித்து தற்போது திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களது திருமணம் கடந்த ஜூன் 9 ஆம் தேதி சென்னை ஷேர்டன் ஹோட்டலில் குடும்பத்தினர் மற்றும் திரைப்பிரபலங்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இவர்களது திருமணம் பிரபல ஓடிடி தளமான “நெட்பிலிக்ஸ்”-ல் வெளியாகியுள்ள நிலையில், தற்போது அந்த ஆவணப்படத்திலிருந்து டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தான், நயந்தாரா உட்கொண்ட உணவினால் ஒவ்வாமை ஏற்பட்டதாகவும் அதனால் அவர் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவர் விக்னேஷ் , நயன்தாராவை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார் எனவும், பின்னர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியான . ஆனால், இதனை விக்னேஷ் – நயன்தாரா தரப்பு மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தான், விக்னேஷ் – நயன்தாரா தற்போது ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகருக்குச் சென்றுள்ளனர். இதற்கான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், தொடர்ச்சியான வேலைகளுக்குப் பிறகு, இங்கே நாம் நமக்காகச் சிறிது நேரம் எடுத்துக்கொள்கிறோம் எனப் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைராலாகி வருகிறது.







