இன்றைய குழந்தைகள், இளைஞர்கள் ஒன்றிணைந்து 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வலிமையான தேசமாக மாற்ற வேண்டும் என்று ரயில்வே மற்றும் தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒருநாள் பயணமாக தமிழ்நாடு வந்தடைந்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியாரின் நினைவு இல்லத்திற்குச் சென்றார்.
பாரதியாரின் நினைவில்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பின், அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படத் தொகுப்பை ஆர்வமுடன் பார்வையிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து மகாகவி பாரதியாரின் கொள்ளுப்பேரன் நிரஞ்சனை கௌரவித்தார் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ். பின்னர் அங்கு நடைபெற்ற Har Ghar Tiranga நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
தமிழ் மொழி மிகவும் தொன்மையானது; இனிமையானது. தனக்கு தமிழ் மொழி மிகவும் பிடித்தமானது. இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், அதன் வரலாற்றை ஏன் போற்ற வேண்டும் என்பதற்கு சுப்ரமண்ய பாரதி ஓர் உதாரணம்.
அவர் போன்ற சுதந்திரத்துக்காக போராடியவர்களை நினைவுகூர்ந்து போற்ற வேண்டும்.
இன்றைய குழந்தைகள் தான் நாளைய இந்தியாவின் Decision Makers. குழந்தைகள், இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வலிமையான தேசமாக மாற்ற வேண்டும் என்றார் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
இறுதியாக 5G அலைக்கற்றை ஏலம் குறித்து நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, புன்னகையுடன் பதிலளிக்காமல் கடந்து சென்றார் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
நிகழ்வில் தெற்கு ரயில்வே அதிகாரிகள், அஞ்சல் துறை அதிகாரிகள், பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.