கரூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை!

கரூர் காணியாளம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ரமேஷ் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர். கரூர் நகர் பகுதியில் பிளானிங் அப்ரூவல் அதிகாரியாக பணியாற்றிய மூக்கையா பணி…

கரூர் காணியாளம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ரமேஷ் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர்.
கரூர் நகர் பகுதியில் பிளானிங் அப்ரூவல் அதிகாரியாக பணியாற்றிய மூக்கையா பணி மாறுதல் செய்யப்பட்டு தற்போது திருப்பட்டூர் மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், மூக்கையாவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
 இந்த சோதனையானது அவருக்கு நெருக்கமான இடங்களில் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், கரூர் மாவட்டம் காணியாளம்பட்டி பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் ரமேஷ் என்பவர் வீட்டில் தற்போது சோதனை நடைபெற்றது. இவர் மூக்கையாவின் மகன் வெங்கடேசனின் தொழில் பங்குதாரர் ஆவார்.

காலை 8 மணிக்கு சோதனை தொடங்கிய சோதனை மாலை 5 மணி அளவில் நிறைவடைந்தது. சுமார் 9 மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரியல் எஸ்டேட்டில் மூக்கையாவின் மகன் வெங்கடேசன் அவரது தொழில் பங்குதாரர் ரமேஷ் ஆகிய இருவரும் மேற்கொண்ட கணக்கு வழக்குகள் அடங்கிய நோட்டுகள் . மேலும் பல்வேறு சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என தகவல் வெளியாகி உள்ளது. இந்த சோதனை கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.