தொண்டி அருகே ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயிலில் 315-ம் ஆண்டு முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்து ஊர்வலமாக வந்து கடலில் கரைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே முள்ளிமுனை கிராமத்தில் ஸ்ரீ பட பத்திரகாளியம்மன் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் 315-ம் ஆண்டு திருவிழா கடந்த 25-ம் தேதி பெண்கள் கலந்து கொள்ளும் 1008 திருவிளக்கு பூஜையுடன் தொடங்கி மறுநாள் சாமி அருளாட்டம் நடைபெற்றது. மேலும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மூன்றாம் நாளான நேற்று முளைப்பாரி உற்சவம் நடைபெற்றது.
இதில் ஆண்கள்,பெண்கள், சிறுவர்கள் சுமார் 3000 பேர் முளைப்பாரியை தலையில் சுமந்து ஊர்வலமாக வந்து கடலில் கரைத்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். மேலும் இதில் மீனவர்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அனகா காளமேகன்








