வியட்நாம் படகு விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அண்ணாமலை இரங்கல்!

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “வியட்நாம் நாட்டின் பூகுவோக் தீவுக்கு அருகே படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், 10 தமிழர்கள் உட்பட 15 இந்திய சுற்றுலா பயணிகள் உயிரிழந்த செய்தி பேரதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

இந்த துயரமான விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும், தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்கவும், உயிரிழந்தோரின் உடல்களை விரைந்து தாயகம் கொண்டு வரவும், துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய அரசையும், தமிழக அரசையும் கேட்டுக் கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.