காட்டு யானையை அச்சுறுத்திய சுற்றுலா பயணிகள் – வீடியோ வைரல்!

ஒகேனக்கல்லில் ஆபத்தை உணராமல் காட்டு யானையை சுற்றுலா பயணிகள் அச்சுறுத்திய வீடியோ வைரலாகி வருகிறது. தருமபுரி மாவட்டம், பொன்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு மடம் சோதனை சாவடி முதல் ஒகேனக்கல் காவல் நிலையம்…

ஒகேனக்கல்லில் ஆபத்தை உணராமல் காட்டு யானையை சுற்றுலா பயணிகள் அச்சுறுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

தருமபுரி மாவட்டம், பொன்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு மடம் சோதனை சாவடி முதல் ஒகேனக்கல் காவல் நிலையம் வரை உள்ள பாதை காடுகள் வழியாக செல்கிறது. கணவாய் பள்ளம் பகுதியில் யானைகள் சாலையை கடப்பது என்பது இயல்பான ஒன்று. இந்நிலையில் இந்த பகுதியில் யானை கடக்கும்போது காட்டு யானை ஒன்று சாலை அருகே இருந்த தண்ணீரை குடித்துக் கொண்டு இருந்தது.

இதனை கண்ட இருசக்கர வாகனத்தில், கார்களில் வரும் பயணிகள் ஆபத்தை உணராமல் வாகனத்தை நிறுத்தி தங்கள் செல்போனில் வீடியோ, செல்பி எடுத்து செல்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  கடந்த இரு மாதங்களில் பாலக்கோடு, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் யானை தாக்கி இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

எனவே யானையை அச்சுறுத்தும் வகையில் செய்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மடம் சோதனை சாவடியில் யானையை அச்சுறுத்தும் வகையில் நடந்துக் கொள்ளவும், வாகனங்களை நிறுத்தவும், கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

—-அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.