வங்கக்கடலில் வரும் 7 அல்லது 8 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. வெயிலின் தாக்கம் கடந்த வாரம் வாட்டி வதைத்து வந்த நிலையில், மழை பெய்து குளிர்ச்சி நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், தமிழக பகுதிகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவி வருவதாக தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : ஏப்ரல் மாதம் மெட்ரோ ரயில்களில் 66 லட்சம் பேர் பயணம் – சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்
இன்று முதல் வரும் 6 ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நீலகிரி, ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் எனவும் கூறியுள்ளார். மேலும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தார்.