தமன்னாவின் ‘காவாலா’ பாடலுக்கு ஜப்பானியர் நடனமாடிய வீடியோ வைரல்.!

ஜெயிலர் படத்தில் வெளியான முதல் பாடலான ’காவாலா’ பாடலுக்கு ஜப்பானியர் ஒருவர் நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த…

ஜெயிலர் படத்தில் வெளியான முதல் பாடலான ’காவாலா’ பாடலுக்கு ஜப்பானியர் ஒருவர் நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ஆம் தேதி அன்று உலக முழுவதும் வெளியானது. தமிழகத்தை பொறுத்தவரை 900 மேற்பட்ட திரையரங்குகளில் காலை முதல் காட்சி வெளியானது. உலகம் முழுவதும் 4000 திற்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த், முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்திருந்தார். ரஜினிகாந்த்துடன் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, மற்றும் விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ கடந்த ஜூலை 8-ம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் தமன்னா நடனமும், ரஜினியின் ஸ்டைலான தோற்றமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த பாடல் இணையதளத்தில் இன்றுவரை வைரலாகி வருகிறது.

தமன்னா தாறுமாறாக நடனம் ஆடியுள்ள இப்பாடல் இணையத்தில் செம வைப் மெட்டீரியலாக மாறி உள்ளது மட்டுமின்றி இப்பாடலில் தமன்னா பாட்டியாவின் சூப்பர் கூல் நடன அசைவுகள் இணையத்தை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. மேலும் சுருட்டை முடி மற்றும் கவர்ச்சியான ஹூக் ஸ்டெப்ஸ்சுடன் அவர் ஆடியிருந்த நடனத்தை நெட்டிசன்கள் இன்றுவரை ரீல் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், இந்த பாடல் அதன் கவர்ச்சியான இசை மற்றும் நடன அசைவுகளுடன் இந்தியாவில் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள திரைப்பட ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில், சமீபத்தில், ஜெயிலர் படத்தின் பிரபலமான பாடலுக்கு ஜப்பானியர் ஒருவர் நடனமாடுவது போன்ற காணொளி ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜப்பானியர் ஒருவர் நடனமாடும் அட்னாஹ் வீடியோ “ஜப்பானில் இருந்து Kaavaalaa,” என்று தலைப்பிட்டு Kaketaku என்ற Youtube மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது

இந்த வீடியோ கிளிப்பில், சாதாரண பேன்ட் மற்றும் சட்டை மற்றும் இடுப்பு கோட் அணிந்த இளைஞர் ஒருவர் கூலாக தமன்னாவை போன்றே பாடலுக்கு நடனமாடுவதைக் காணலாம். அவர் தமன்னாவின் ஸ்டெப்ஸ்களை அப்படியே பின்பற்றுவது மட்டுமல்லாமல், நடன அமைப்பில் தனது சொந்த பாணியையும் சேர்க்கிறார். யூடியூப் ஷார்ட்ஸிலும்  பகிரப்பட்டதிலிருந்து, வீடியோ 446k பார்வைகளையும் 34k க்கும் அதிகமான விருப்பங்களையும் குவித்துள்ளது. இதற்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.

  • பி.ஜேம்ஸ் லிசா

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.