முக்கியச் செய்திகள் இந்தியா

நோயாளியை இருசக்கர வாகனத்தில் மருத்துவமனையில் இருந்து அழைத்து சென்ற வீடியோ வைரல்!

ஜார்கண்டில் ஸ்ட்ரெச்சர் இல்லாததால் இருசக்கர வண்டியில் கொரோனா நோயாளியை மருத்துவமனையில் இருந்து அழைத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலம் பலமு மருத்துவ கல்லூரியில் ஸ்டெச்சர் இல்லாததால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவரை இருசக்கர வாகனத்தில் மருத்துவமனையிலிருந்து அழைத்து சென்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த வீடியோவில், ஸ்கூட்டரில் இரண்டு இளைஞர்களுக்கு இடையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் அமர்ந்திருப்பது பதிவாகியிருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அவர் குணமடைந்து வீட்டுக்கு சென்றாரா அல்லது வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டாரா என்ற தகவல்கள் எதுவும் தெளிவாக தெரியவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கருப்பு பூஞ்சை மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் நடவடிக்கை!

EZHILARASAN D

சாலையில் அறுந்து விழுந்த மின்வயர்- குழந்தையை பள்ளியில் விட்டு வந்தவர் உயிரிழப்பு

Web Editor

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சந்திப்பு

Arivazhagan Chinnasamy