தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்படவில்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள, அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கொரோனா பரவலை தடுக்கும் நோக்குடன், கடந்த வார இறுதியில் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக, பாதிப்பு எண்ணிக்கை ஓரளவுக்கு குறைந்துள்ளதாக கூறினார்.
மேலும், தமிழகத்தில் ஆக்சிஜன் வசதியுடன், கூடுதலாக 12 ஆயிரம் படுக்கை வசதிகள் உருவாக்கப்படும், என குறிப்பிட்ட ராதாகிருஷ்ணன், கொரோனா அறிகுறியுடன் உள்ளவர்களை பரிசோதிக்க, உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி, புதிய வழிமுறையை பரிசோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறினார். தமிழகத்தில் ரெம்டெசிவர் மருந்து கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை தடுக்க, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.







