தமிழகத்தில் 15 ஆயிரத்தைக் கடந்த தினசரி கொரோனா பாதிப்பு!

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 15 ஆயிரத்துக்கு அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்துடன் நாளை…

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 15 ஆயிரத்துக்கு அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்துடன் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகளும் அமலுக்கு வருகின்றன.


இந்த நிலையில் சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், இன்று ஒரே நாளில் 15,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,81,988 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் இன்று மட்டும் 82 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 13,557 ஆக உயர்ந்துள்ளது.


தற்போது மட்டும் 1,05,180 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 11,065 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ள நிலையில் இதுவரை 9,63,251 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 1,26,298 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 4,206 பேருக்கு பாதிப்பு பதிவானது. செங்கல்பட்டு 1,242, கோவை 1,038, திருவள்ளூரில் 885 என பிற மாவட்டங்களிலும் தொற்று உறுதியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.