வேட்டையன் பட ‘மனசிலாயோ’ பாடலுக்கு நடனமாடி ஓணம் கொண்டாடிய #Coolie படக்குழு! உற்சாகத்தில் ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படக் குழுவினர் ஓணம் கொண்டாடிய விடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில் அமிதாப்பச்சன்,…

video , actor, Rajinikanth,Coolie,film crew , Onam

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படக் குழுவினர் ஓணம் கொண்டாடிய விடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா, ரித்திகா சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது திரைப்படமாக ‘கூலி’ உருவாகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பான் இந்திய திரைப்படமாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வரும் முன்னணி நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சவுபின் ஷாயிர், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா ஆகியோர் இதில் நடிக்கின்றனர். ‘தேவா’ என்ற பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார்.

இதையும் படியுங்கள் : “வெற்றி பெற்ற ஒரு மணி நேரத்தில் மது விலக்கு ரத்து செய்யப்படும்” – #PrashantKishor பேட்டி!

இந்நிலையில், தற்போது படக்குழுவினரின் ஓணம் கொண்டாட்ட விடியோ வெளியாகியுள்ளது. இந்த விடியோவில் வேட்டையன் திரைப்படத்தின் ‘மனசிலாயோ’ பாடலுக்கு படக்குழுவினருடன் ரஜினி நடனமாடுகிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கூலி திரைப்படம் அடுத்த ஆண்டு இறுதியில் திரைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.