குஜராத், இமாச்சலில் விஐபி வேட்பாளர்களின் வெற்றி நிலவரம்

குஜராத் மற்றும் இமாச்சல தேர்தலில் போட்டியிட்ட விஐபி வேட்பாளர்களின் வெற்றி நிலவரம் குறித்து பார்க்கலம்.  இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 68 தொகுதிகளை கொண்ட இமாசச்சல சட்டசபைக்கு கடந்த மாதம்…

குஜராத் மற்றும் இமாச்சல தேர்தலில் போட்டியிட்ட விஐபி வேட்பாளர்களின் வெற்றி நிலவரம் குறித்து பார்க்கலம். 

இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 68 தொகுதிகளை கொண்ட இமாசச்சல சட்டசபைக்கு கடந்த மாதம் 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதேபோல் குஜராத்தில் 182 தொகுதிகளுக்கான சட்டச்சபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. டிசம்பர் 1ம் தேதி முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் 5ம் தேதி 2ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் குஜராத்தில் பாஜக முன்னிலை வகித்தது. குஜராத் முதலமைச்சர் வேட்பாளரான பூபேந்திர படேல் கட்லோடியா தொகுதியில் 1,92,263 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

குஜராத்தின் வடக்கு ஜாம்நகர் தொகுதியில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பாஜக சார்பில் போட்டியிட்டார். காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் ஆம் ஆத்மி வேட்பாளருக்கும் ஜடேஜா மனைவி ரிவாபாவுக்கும் இடையே தொடக்கத்தில் இழுபறி நீடித்து வந்தது.

பின்னர் அடுத்தடுத்த சுற்றுகளில் ரிவாபா அதிக வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றார். 13 சுற்றுகள் முடிவில் ரிவாபா 84 ஆயிரத்து 366 வாக்குகளை பெற்றுள்ளார். அவர் பிற கட்சி வேட்பாளர்களை விட 39 ஆயிரத்து 268 வாக்குகள் முன்னிலையில் வெற்றி பெற்றார். விராம்காம் தொகுதியில் போட்டியிட்ட ஹர்திக் பட்டேல் வெற்றி பெற்றுள்ளார். கம்பாலியா தொகுதியில் போட்டியிட்டஆம் ஆத்மி முதலமைச்சர் வேட்பாளார் இசுதான் காத்வி 58, 467 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

இதேபோல் இமாச்சலில் பாஜக முதலமைச்சர் வேட்பாளர் ஜெயராம் தாகூர் 52,076 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளர் அக்னி கோத்ரி ஹரோல் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.