துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் – நாளை மாதிரி வாக்கு பதிவு

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கன மாதிரி வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.

நாட்டின் துணை ஜனாதிபதியும் இருந்த ஜெகதீப் தன்கர் உடல் நிலையை காரணம் காட்டி கடந்த ஜூலை 21 அன்று திடீரென பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதவிக்காலம் 2027 ஆகஸ்ட் மாதம் வரை உள்ளது.இதனை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையமானது  துணை ஜனாதிபதி பதவி தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது.

அதன்படி புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய செப்டம்பர் 9ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சிபி ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன ரெட்டியும் போட்டியிடுகின்றனர்

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்.9-இல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாக திங்கள்கிழமை(செப். 8) மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர். மாதிரி வாக்குப்பதிவின்போது, எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு துணை ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது உள்ளிட்ட நடைமுறைகள் பற்றி விளக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்திலுள்ள சம்விதான் சதான் மத்திய அரங்கில் நாளை பகல் 2.30 மணியளவில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.