இன்று இரவு 9.50 மணி முதல் அதிகாலை 1.31 மணி வரை சந்திர கிரகணம் நிகழவுள்ளது. மரபுபடி கிரணத்திற்கு 6 மணி நேரம் முன்பு கோயில்களின் கதவுகள் மூடப்படுவது வழக்கம். தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்கள் கதவுகள் மூடப்பட்டது.
இந்நிலையில், கிரகண காலம் வரை திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலின் கதவுகள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆா். நாயுடு அளித்த தகவ்லின் படி,
கோயிலின் கதவுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3.30 மணி முதல் நாளை (திங்கள்கிழமை) அதிகாலை 3 மணி வரை மூடப்பட்டிருக்கும் என்றும் திங்கள்கிழமை காலை வேதங்களின்படி சுத்திகரிப்பு மற்றும் பிற சடங்குகளை முடித்த பிறகு, ஏழுமலையான் கோயில் கதவுகள் அதிகாலை 3 மணிக்கு மீண்டும் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







