முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

வெங்கடேசன் எம்.பி. கடிதத்திற்கு இந்தியன் வங்கி பதில்

கருவுற்ற மகளிருக்கு பணி நியமன மறுப்பு விதி நீக்கம் செய்யப்பட்டது என மதுரை எம்.பி.வெங்கடேசன் கடிதத்திற்கு இந்தியன் வங்கி பதில் தெரிவித்துள்ளது.

 

இந்தியன் வங்கி வெளியிட்டு இருந்த பணி நியமன வழிகாட்டல்களில், கருவுற்ற காலத்தில் மகளிருக்கு பணி நியமனங்கள் மறுக்கப்படுகிற அம்சம் இடம் பெற்று இருந்தது. பெண் தேர்வர் மருத்துவப் பரிசோதனையின் போது 12 வாரங்கள் அல்லது அதற்கு மேல் கருவுற்ற காலத்தை கடந்திருப்பது தெரிய வரும் பட்சத்தில், பிரசவத்திற்கு பிந்தைய ஓய்வு காலம் வரையிலும், அவர் பணி நியமனம் பெற தற்காலிகமாக தகுதி அற்றவர் என்று கருதப்படுவார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

பிரசவம் முடிந்து 6 வாரம் நிறைவு பெற்ற பின்னர், பதிவு செய்யப்பட்ட மருத்துவரிடம் இருந்து உடல் நல தகுதி பெற்று சமர்ப்பிக்கப்பட்டால், அவர் மறு மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உடல் நலத் தகுதி உறுதி செய்யப்பட வேண்டும் என்ற வழிகாட்டல் அப்பட்டமான பாலின பாரபட்ச நடைமுறை என மதுரை எம்.பி.வெங்கடேசன் குற்றம்சாட்டியிருந்தார்.

 

மேலும் இதனை கைவிட வேண்டும் என இந்தியன் வங்கி தலைவர் சாந்திலால் ஜெயினுக்கு ஜூன் 12ம் தேதியன்று அவர் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு ஜூன் 16ம் தேதியன்று பதில் அளித்த இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் அஸ்வினி குமார், சம்பந்தப்பட்ட பெண் ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்த அடிப்படையிலேயே பணியில் சேர கால அவகாசம் சிலருக்கு தரப்பட்டது என தெரிவித்திருந்தனர்.

 

இதையடுத்து, 1987 வெளியிடப்பட்ட ஒன்றிய அரசின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறையின் சுற்றறிக்கை ஒன்றையும் குறிப்பிட்டு, மீண்டும் ஜூன் 21 அன்று இந்தியன் வங்கி தலைவருக்கு வெங்கடேசன் எம்.பி. ஒரு கடிதத்தை எழுதினார். அதில், சம்பந்தப்பட்ட மகளிர் ஊழியர்கள் வேண்டுகோளின் அடிப்படையிலேயே பணி நியமனங்கள் சில நேரங்களில் தள்ளிப் போடப்பட்டுள்ளது என்ற விளக்கத்திற்கும், பணி நியமன வழி காட்டல்களுக்கும் ஒன்றுக்கொன்று பொருந்தாத முரண் இருப்பதை சுட்டிக் காட்டி பணி நியமன வழிகாட்டல்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 

அதற்கு மீண்டும் ஜூலை 4, 2022 அன்று இந்தியன் வங்கி நிர்வாக இயக்குனர் அஸ்வினி குமார் பதில் கடிதம் அனுப்பியிருந்தார். அதில், முந்தைய கடிதத்தில் இப்பிரச்சினை மறு பரிசீலனை செய்யப்படும் என்று உறுதி அளித்திருந்ததின் படி பரிசீலனை மேற்கொண்டு, இனி தவறான பொருள் கொள்தல் நிகழ்ந்து விடக் கூடாது என்று அந்த விதியை நீக்கி இருக்கிறோம்.

இதுவரை எந்த மகளிரும் இந்தியன் வங்கியில் பணி நியமனம் மறுக்கப்பட்டதில்லை என்றும் வங்கி பாலின பாரபட்ச நடைமுறைகளை கடைப்பிடிப்பதில்லை எனவும் தெரிவித்துக் கொள்வதாக கூறப்பட்டு இருந்தது. இத்தோடு இப்பிரச்சினை முடிந்து விட்டதாக எடுத்துக் கொள்ள அனுமதிக்குமாறு வேண்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

இது மகிழ்ச்சி அளிப்பதாக வெங்கடேசன் எம்.பி.தெரிவித்துள்ளார். மேலும் இந்தியன் வங்கிக்கு நன்றி தெரிவிப்பதாகவும், இந்திய நாட்டின் பெருமை மிக்க அரசு வங்கியான இந்தியன் வங்கியின் பங்களிப்பு மீது அளப்பரிய மரியாதை எப்போதும் உண்டு எனவும், வங்கி மென்மேலும் பல உயரங்களை எட்ட வாழ்த்துக்களையும் எம்.பி.சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள்: தலைமை தேர்தல் அதிகாரி!

Jeba Arul Robinson

ஆகஸ்ட் 1-க்குப் பிறகு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: பொன்முடி

Vandhana

‘மத்திய அரசு ஆளுநருக்குப் புத்திமதி கூற வேண்டும்’ – டி.ஆர்.பாலு எம்.பி

Arivazhagan Chinnasamy