மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக வேலூரில் ஆர்ப்பாட்டம்!

டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக வேலூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக எம்.பி…

டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக வேலூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக எம்.பி யை கைது செய்ய கோரி தலைநகர் டெல்லியில் இந்திய மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் போராடி வருகின்ற மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பாலியல் புகாருக்கு உள்ளான பாரதிய ஜனதா கட்சி எம்.பி பிரிஜ் பூசனை கைது செய்ய கோரி வேலூர் அண்ணா கலையரங்கம் முன்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.