வேலூர், ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி இடப்பங்கீட்டை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அக்.6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், பாமக, நதக, மநீக ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.
திமுக கூட்டணிக் கட்சிகளுடன் களமிறங்குகிறது. இதனையடுத்து தற்போது வேலூர் மாவட்டத்திற்கான இடப்பங்கீடு பட்டியலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏழு ஒன்றியங்களில் உள்ள 14 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 13 இடங்களில் திமுக போட்டியிடுகிறது. 7 ஒன்றியங்களிலும் மொத்தம் 138 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 3, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 132 இடங்களில் திமுக போட்டியிடுகிறது.








