இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை கடந்த சில நாட்களாக, ஏற்ற இறக்க மாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,115 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,35,04,534 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 252 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,45,385 ஆக உயர்ந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 34,469 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,27,49,574 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் தொற்றுக்கு 3,09,575 பேர் இப்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
#Unite2FightCorona#LargestVaccineDrive
𝐂𝐎𝐕𝐈𝐃 𝐅𝐋𝐀𝐒𝐇https://t.co/EAnEd2JZev pic.twitter.com/c6rF6BafXx
— Ministry of Health (@MoHFW_INDIA) September 21, 2021
இந்தியாவில் இதுவரை 81,85,13,827 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 96,46,778 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.