மதுரையில் கடந்த அக்டோபர் 14ம் தேதி அன்று மூன்று மாடியுடன் கட்டப்பட்ட தனிஷ்க் தங்க நகை கடை திறக்கப்பட்டது. இந்த நகைக்கடையின் தரைத்தளத்தில் விற்பனை நடைபெற்று கொண்டிருந்த வேளையில், இரண்டாம் தளம் காலியாக இருந்தது. மேலும் அதன் மூன்றாம் தளத்தில் நகைகளை பாதுகாப்பாக வைப்பதற்கான, லாக்கர்களை பொருத்தும் பணி நடைபெற்று வந்தது.
இதையடுத்து கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கடைக்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், அங்கிருந்த லாக்கர்களை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிக்க ஒன்பது சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
நகைக்கடையில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் சோதனை நடத்தினர். இந்த நிலையில் நகைக்கடை கொள்ளை வழக்கில் இன்ஸ்டா இன்ப்ளூயன்சர் மீனாட்சி உள்ளிட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் யூடியூபர் நிஷாந்த் என்பவரின் தந்தை சுரேஷை கைது செய்து, அவரிடம் இருந்த 5 கிலோ தங்க நகைகளை போலைசார் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




