முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஜல்லிகட்டு காளைகளுக்கு வாகனச் சான்று கட்டாயம் – மதுரை மண்டல கால்நடைத்துறை அறிவிப்பு

ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள அனுமதி டோக்கன் பெற்ற ஜல்லிகட்டு காளைகளுக்கு
வாகனச் சான்று பெறுவது கட்டாயம் என மதுரை மண்டல கால்நடைத்துறை அறிவித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வரும் ஜனவரி 15, 16 ,17 ஆகிய
தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு. அலங்காநல்லூர், ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு
நடைபெற உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளக்கூடிய காளைகளுக்கு ஆன்லைன் பதிவு
செய்யப்பட்டு, முன்பதிவு செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தற்பொழுது
அனுமதி டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

அனுமதி டோக்கன் பெற்ற காளைகளின் உரிமையாளர்கள் தங்களது காளைகளை அழைத்துச் செல்ல உள்ள வாகனங்களுக்கான அனுமதி சான்று அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை மருத்துவரிடம், தங்களுக்கு கிடைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு காளைகளுக்கான அனுமதி டோக்கனை சமர்ப்பித்து ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றிச்செல்லும் வாகன தகுதி சான்றிதழ் பெறுவது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதற்கான சான்றுகளை பெற்றால் தான் ஜல்லிக்கட்டு அன்று இறுதி கட்ட பரிசோதனைக்கு
செல்லும் பொழுது இந்த காளைகளை வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டில் பங்கேற்க
அனுமதிக்க முடியும் என்று மாவட்ட, நிர்வாகம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே ஜல்லிக்கட்டு காளைகளுக்கான அனுமதி டோக்கன் பெற்றவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை மருத்துவரிடம்  டோக்கனை காண்பித்து வாகன தகுதி சான்று பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திராவிட மண்ணை காவி மண்ணாக மாற்ற தீவிர முயற்சி நடக்கிறது- திக தலைவர் கி.வீரமணி

EZHILARASAN D

படப்பிடிப்பே துவங்காத நிலையில் ‘கேப்டன் மில்லர்’ படம் செய்த சாதனை

EZHILARASAN D

டெல்லி, மும்பையில் அதிகரித்த கொரோனா பாதிப்பு

Halley Karthik