போகி பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி பழைய பொருட்களை மக்கள் அதிகம் எரித்தன் காரணமாக சென்னையில் காற்றின் தரம் குறைந்து காணப்படுவதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில் போகி பண்டிகையான இன்று சென்னையில் மயிலாப்பூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கிராம மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பழைய துணிகள், போர்வைகள் மற்றும் பாய்கள் என பழையபொருட்கள் அனைத்தையும் தங்கள் வீடுகளுக்கு முன்பாக நெருப்பிலிட்டு கொளுத்தினர். அதனைத் தொடர்ந்து சிறுவர்கள் கொழுந்துவிட்டு எரியும் தீயைச் சுற்றி நின்று மேளம் அடித்து போகிப் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இயற்கைக்கு எதிராக , காற்றை மாசுபடுத்தும் எந்த செயலையும் செய்ய கூடாது என தமிழக அரசு அறிவித்திருந்தது. சென்னை முழுவதும் போகி பண்டிகை கொண்டாடிய வரும் நிலையில் சென்னை புகை மூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள அளவை விட மிக அதிக அளவு காற்று மாசு ஏற்பட்டுள்ளது. காற்றில் PM 2.5 எனும் நுண் துகள்களின் அளவு உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள அளவை விட 7.8 மடங்கு அதிக அளவில் உள்ளது.
சென்னையில் காற்று மாசின் அளவு மிதமான அளவில் இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. குறிப்பாக PM 2.5 மற்றும் PM10 ஆகிய நுண் துகள்கள் காற்றில் அதிக அளவு கலந்திருப்பதாக தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை ஆலந்தூர் மண்டலத்தில் அதிக காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.